BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
அமெரிக்காவுக்குச் சொந்தமான ஜெட் எரிபொருள் கொண்டு சென்ற கப்பல் மீது மோதிய மற்றொரு கப்பல்
ஸ்டெனா இம்மாகுலேட் கப்பல் ஜெட் எரிபொருளை எடுத்துச் சென்றபோது, வட கடலில் சோலாங் சரக்கு கப்பலால் மோதி விபத்துக்கு விபத்துக்குள்ளானது.
லலித் மோதிக்கு குடியுரிமை வழங்கி பின்னர் ரத்து செய்த வனுவாட்டூ எங்கு உள்ளது?
வனுவாட்டூ 80க்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கிய ஒரு நாடாகும். இந்த நாடு ஒரு காலத்தில் 'நியூ ஹெப்ரைட்ஸ்' என்று அழைக்கப்பட்டது. இத்தீவுகள் 1980 ஆம் ஆண்டு, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனிடம் இருந்து சிதந்திரம் அடைந்தது.
தர்மேந்திர பிரதானின் விமர்சனமும், ஸ்டாலினின் எதிர்வினையும் - நாடாளுமன்றத்தில் இன்று என்ன நடந்தது?
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ஒதுக்காத விவகாரம் குறித்து அமளி ஏற்பட்டது. என்ன நடந்தது?
முகமது ஷமி நோன்பு கடைப்பிடிக்கவில்லை என விவாதம் - இன்சமாம் உல்-ஹக் கூறிய அறிவுரை என்ன?
துபையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் போது முகமது ஷமி தண்ணீர் (அல்லது ஜூஸை) குடிப்பதை மக்கள் கண்டனர். இது சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஆனால், பல்வேறு பிரபலங்கள் ஷமிக்கு ஆதரவாக முன்வந்தனர்.
அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கனடாவின் புதிய பிரதமராக தேர்வாகியுள்ள மார்க் கார்னி - யார் இவர்?
ஜஸ்டின் ட்ருடோவுக்கு அடுத்து கனடாவின் அடுத்த பிரதமர் யார் என்ற போட்டியில், மார்க் கார்னி வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான வர்த்தகப் போரில் கனடாவை வெற்றிபெறச் செய்யப் போவதாக மார்க் உறுதி அளித்துள்ளார்.
இந்தியா ஆதிக்கம்: சாம்பியன்ஸ் டிராபி நிகழ்வுகள் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலத்திற்கான எச்சரிக்கை மணியா?
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. துபை நகரில் ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்கள் இதனை கொண்டாடினாலும், இந்த தொடரில் நடந்த சில தவிர்க்க இயலாத விஷயங்கள் சர்வதேச கிரிக்கெட் வழிநடத்தும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும்.
சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்றது பற்றி பாகிஸ்தான் ஜாம்பவான்கள் கூறுவது என்ன?
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்தியா கோப்பையை கைப்பற்றியது பற்றி பாகிஸ்தான் ஜாம்பவான்கள் கூறியது என்ன?
காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட மலம்புழா அணையிலிருந்து மதுபான ஆலைக்குத் தண்ணீர்: கேரளாவில் வலுக்கும் போராட்டம் – பிபிசி கள ஆய்வு
கேரள மாநிலம் மலம்புழா அணையிலிருந்து தண்ணீர் எடுக்க மது ஆலைக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதற்கு அந்த மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் இத்திட்டத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன.
காணொளி, இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் யார்? , கால அளவு 4,07
2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டில் இந்தியாவின் வெற்றித்தருணத்தில் கேப்டன் தோனி குழந்தை போல சந்தோஷத்தில் குதிப்பதை யாராலும் மறந்திருக்க முடியாது.
நீங்கள் அவசியம் காண வேண்டிய உலகின் தனித்துவமான 10 இடங்கள்
உங்களுக்கு மிகச் சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் உலகின் மிக தனித்துவமான, அதிகம் ஆராயப்பட வேண்டிய 10 சுற்றுலா இடங்களை இங்கே தொகுத்துள்ளோம்.
கடலூரில் விஷம் அருந்திவிட்டு மனைவி மீது பழிபோட்ட கணவர் - உண்மை வெளிவந்தது எப்படி? இன்றைய முக்கிய செய்திகள்
இன்றைய ( 10/03/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
புதின் கனவு நனவாகிறதா? ஒரே வாரத்தில் நிகழ்ந்த 4 முக்கிய மாற்றங்கள்
செளதி அரேபியாவில் அடுத்த வாரம் புதிதாக அமெரிக்கா – யுக்ரேன் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் இந்த முக்கிய நாடுகள் என்ன நினைக்கின்றன?
சிறப்புப் பார்வை
விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் இதயம் வேகமாக முதுமை அடையுமா?
மனிதர்கள் பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்து வரும் பூமியில், இதயம் தொடர்பான நோய்கள் என்பது சாதாரணமான ஒன்றாக இருக்கும்போது, மனித இனத்தின் எதிர்கால லட்சியமான 'விண்வெளியில் குடியேறுவது' சாத்தியமானால், பூஜ்ஜிய ஈர்ப்பு விசை சூழலில் இதயத்தில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் அதிக நாள் தங்கினால் இதயம் வேகமாக முதுமை அடையுமா?
வங்கதேசத்தில் ஹசீனா அரசை அகற்றிய மாணவர்களின் புதிய கட்சி எந்த அளவுக்கு மாறுபட்டது?
வங்கதேசத்தில் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் தாங்கள் தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சிக்கு ஜாதிய நாகரிக் கட்சி (நேஷனல் சிட்டிசன் பார்ட்டி) என்று பெயரிட்டுள்ளனர். இந்தக் கட்சி எந்த அளவுக்கு மாறுபட்டது? அந்நாட்டில் உள்ள இருபெரும் கட்சிகளை தாண்டி இதனால் சாதிக்க முடியுமா?
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் - சிறையில் இருக்கும் பிறரின் நிலை என்ன?
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இரண்டு இந்தியர்களுக்கு தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்கள். அங்கு சிறையிலுள்ள பிற இந்திய கைதிகளின் நிலை என்ன? அவர்களை மீட்க இந்திய அரசு என்ன செய்கிறது?
டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு கெடு விதித்தது ஏன்? நாடாளுமன்ற உரையின் 7 முக்கிய அம்சங்கள்
ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், நாடாளுமன்ற கூட்டுத்தொடரில் மிகவும் நீளமான உரையை நிகழ்த்தியுள்ளார். அதில், யுக்ரேன் போர் முதல் பணவீக்கம் வரை அவர் பேசிய ஆறு முக்கிய விஷயங்கள் என்ன?
இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? நிழலுலக மோதல், வாள்வெட்டு சம்பவங்கள் உணர்த்துவது என்ன?
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை இடம்பெற்ற 19 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் பின்னணி என்ன? நிழலுலக மோதல், வாள்வெட்டு, அடிப்படைவாத சம்பவங்கள் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனவா?
உடல் பருமனாகாமல் இருக்க தினசரி சமையலில் எந்த எண்ணெய், எவ்வளவு சேர்க்க வேண்டும்?
பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற 'மான் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில், தாங்கள் எடுத்துக்கொள்ளும் எண்ணெயின் அளவை 10 சதவிகிதமாக குறைக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். உடல் பருமனை குறைப்பதில் அது முக்கியமான நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு போல, இந்தியாவில் வேறு எங்கெல்லாம் மொழி காக்கும் போராட்டம் நடந்துள்ளது தெரியுமா?
தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் போலவே, இந்தியா முழுவதும் மொழி காக்கும் போராட்டங்கள் நடந்தேறியுள்ளன. அவற்றில் 5 முக்கியமான மொழி காக்கும் போராட்டங்கள் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
அமெரிக்காவில் ஸெலன்ஸ்கி நடத்தப்பட்ட விதம் இந்தியாவுக்கு சொல்லும் சேதி என்ன?
வெள்ளை மாளிகையில் டிரம்ப் - ஸெலன்ஸ்கி சந்திப்பின் போது ஏற்பட்ட வார்த்தை மோதல் உலகம் முழுவதும் கவனம் பெற்றது. இந்த சந்திப்பின் போது ஸெலன்ஸ்கி நடத்தப்பட்ட விதம் இந்தியாவுக்கு சொல்லும் சேதி என்ன? மோதி அமெரிக்கா சென்ற போது நிலைமையை எவ்வாறு கையாண்டார்?
ஆஸ்திரேலியாவின் வியூகத்தை தகர்த்த கோலி - இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த 5 விஷயங்கள்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபித் தொடரின் இறுதிப் போட்டிக்கு 5-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இந்திய அணியின் நேற்றைய அரையிறுதி வெற்றிக்கு ஒட்டுமொத்த அணியின் சிறப்பான செயல்பாடு காரணமாகக் கூறப்பட்டாலும் அதில் முக்கியமான 5 அம்சங்கள் உள்ளன. அவை குறித்துப் பார்க்கலாம்.
டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் எந்தெந்த நாடுகள் பாதிக்கப்படும்? - அமெரிக்கர்களுக்கும் கூட சிக்கலா?
மார்ச் 4 ஆம் தேதி, கனடா மற்றும் மெக்ஸிகோ மீது அமெரிக்கா வரி விதிப்பு நடவடிக்கையைத் தொடங்க உள்ளது. மேலும், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஃபென்டனில் அமெரிக்காவிற்குள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற கேரள நபர் சுட்டுக் கொலை - எல்லையில் என்ன நடந்தது?
இஸ்ரேல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்கள் மீது ஜோர்டான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் மரணமடைந்தனர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்?
பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
இஸ்ரேல் – பாலத்தீனம் மோதல்
காணொளி
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்